• Sat. Apr 20th, 2024

மணி முர்த்தீஸ்வரம்  … விநாயகர் திருமண கோலத்துடன் காட்சிதரும் திருத்தலம்

ByAlaguraja Palanichamy

Aug 31, 2022

இந்திரன் வழிபாடும், விநாயகர் வழிபாடும் உலகம் முழுவதும் இருந்து வருகிறது.! அன்னையை அழைக்கக் கூடிய தாய் என்ற பெயரையும், நிலத்தைக் குறிக்க கூடிய லேண்ட் என்கிற பெயரையும் இணைத்து உருவான தாய்லாந்த் நாட்டில் உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ளது.! தாய்லாந்து நாட்டு மக்கள் அரிசி உணவை உண்டு வருகின்றனர்.!தாய்லாந்து விமான நிலையத்தில் விமான நிலைய பணியாளர்கள் இந்திரன் சிலையை தினமும் வணங்கி பணியைத் தொடங்கி வருகின்றனர்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு, ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர் திருக்கோயில், மணி முர்த்தீஸ்வரம்  திருக்கோயிலில், ஆசியாவிலே விநாயகர் திருமண கோலத்துடன் விநாயக கடவுளின் மடியில் நீலவேணி அம்பாள் அமர்ந்திருப்பது போன்று மூலவர் காட்சி தருகிறார்.  கோபுரத்துடன் உள்ள விநாயகர் திருக்கோயில் இங்கு மட்டும்தான் உள்ளது 800 ஆண்டுகள் பழமையானது.
ஆன்மீகத்திலும், சரித்திரம் படைத்த இந்திர குல, ஷத்திரியர் வம்சாவளியினரான தேவேந்திரர் மற்றும் வன்னியர், ஆசியா கண்டத்தில் விநாயகருக்கு கருங்கல்லில் மிகப்பெரிய சிலை நிறுவியவர்கள். தமிழ்நாட்டில் உள்ள கொங்கு நாட்டு தேவேந்திர குல வேளாளர்கள் கோவை புலியகுளம் பகுதியில் 1982 ஆம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர்களின், அறக்கட்டளையால் விநாயகர் கோவில் ஒன்று நிறுவப்பட்டது. இந்த கோவில் புளியகுளம் மாரியம்மன் கோவிலை சேர்ந்த துணைக்கோயில் ஆகும். இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது இது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய கருங் கற்சிலைகளில் ஒன்றாகும் இது 1998ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *