• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

மின் கம்பம் முறிந்து விழுந்து ஊழியர் படுகாயம்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருபவர் அய்யப்பன்.இவர் நேற்று நேரு பஜாரில் உள்ள மின் கம்பத்தின் இணைப்பை தூண்டித்துவிட்டு, கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்துள்ளார்.அப்போது பழுதான மின் கம்பம் முறிந்து கீழே விழுந்ததில் ஐயப்பன் காலில் முறிவு ஏற்பட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில்,
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தேவகோட்டை நகர் முழுவதும் பல இடங்களில் மின்கம்பங்கள் பழுதாகியுள்ள
தை மின் வாரியம் கண்டுகொள்ளாததால்தான்
இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக தேவகோட்டை பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.