• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ரயில் பயணத்தில் உங்களுக்கு பிடித்த ஓட்டல் சாப்பாடு!

ByA.Tamilselvan

Aug 26, 2022

வாட்ஸ் அப் மூலம் ரயில்பயணத்தில் உங்களுக்கு பிடித்த ஓட்டல் சாப்பாடு இனி கிடைக்கும். நீண்டதூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தங்களுக்கு பிடித்த ஓட்டலில் பிடித்த உணவை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஐஆர்சிடிசி. தற்போது வாட்ஸ் அப் மூலமே பிடித்த ஊரில் உள்ள பிடித்த ஹோட்டலின் உணவை ஆர்டர் செய்யலாம். இது எப்படி என்பதை தற்போது பார்க்க லாம்.
மொபைலில் 70420 62070 என்ற எண்ணை பதிவு செய்துவிட்டு வாட்ஸ் அப்பில் ஹேய் என மெசேஜ் அனுப்ப வேண்டும். உடனே உங்களுக்கு ஜூப் நிறுவனத் தில் இருந்து ஒரு மெசேஜ் வரும். அதில் உணவை ஆர்டர் செய்ய வேண்டுமா? அல்லது பிஎன்ஆர் எண்ணை சரி பார்க்க வேண்டுமா? அல்லது நீங்கள் ஆர்டர் கொடுத்த உணவின் நிலை என்ன என்பதை அறிய வேண்டுமா ? அல்லது புகார் ஏதாவது தெரிவிக்க வேண்டுமா ? என மெசேஜ் வரும். அவர்கள் பரிந்துரைத்துள்ள ஹோட்டல்களில் என்ன உணவு வேண்டும் என்பதை ஆர்டர் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களது பிஎன்ஆர் எண்ணையும் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த பிஎன்ஆர் எண் சரிதானா என்ற பரிசோதனை முடிந்த பின்னர் உங்கள் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படும். நீங்கள் பரிந்துரைக்கும் ரயில் நிலையத்தில் உங்களுக்கான உணவு கொண்டு வந்து கொடுக்கப் படும். அதற்கு முன்னர் அந்த உணவிற்கான பில்லை ஆன்லைன் மூலம் நீங்கள் செலுத்த வேண்டும்.