• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுத வேண்டும்

ByA.Tamilselvan

Aug 23, 2022
TN Government

பள்ளி கல்லூரி மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுதவேண்டும் என தமிழக அரசு உத்தவு பிறபித்துள்ளது.
தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையில் முதல்-அமைச்சர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது .அதே போல பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும், தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டு வர மாணவர்கள் பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரை முன்னெழுத்துடன் வழங்கும் நடைமுறையை கொண்டு வரவேண்டும். மேலும் மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது.