• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

இந்தி வெறியர்களின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்..,

ByA.Tamilselvan

Aug 2, 2022

ரயில் நிலையங்களில் இந்தி வெறியர்களால் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள்.
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை சஹ்யோக் என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை வன்மையாக கண்டிப்பதாகக் கூறியுள்ள அவர் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தலையிட்டு உத்தவை திரும்ப பெற வேண்டுகிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.