• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பாண்டிய குல வேளாளர் சங்கத்தின் மகாசபை கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Jul 22, 2026

சிங்கமாம் அழகு இருளப்பர் பாண்டிய குல வேளாளர் சங்கம் பதிவு எண் 76/2021.மகாசபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் புட்டுத்தோப்பு ஸ்ரீ பூஞ்சோலை முத்தையா சாமி திருக்கோவில் சங்கத் தலைவர் சுப்புராஜ் செயலாளர் ராஜகுமாரன் பொருளாளர் மாரியப்பன் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார்கள்.

கூட்டத்தில் சங்கத்தின் மூத்த பெரியவர்கள் மற்றும் 17 ஊர் பங்காளிகள் முன்னிலையில் வரவு செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் புதிய சங்க மகாசபை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது புதிய மகாசபை தலைவராக மகிழன் செயலாளராக கேரவன் பாஸ்கர் பொருளாளராக பாலமுருகன் உள்பட இளைஞர் அணியினர் மற்றும் பல்வேறு துணை அமைப்புகளுக்கு பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.