பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 73வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.
முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேசமயம் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.