கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 10மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழை காரணமாக 6பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவரை காணவில்லை என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை வரை 48 மணி நேரத்திற்கு அதி தீவிர கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த 10 மாவட்டங்களில் கோட்டயம் தவிர்த்து, காசர்கோடு மாவட்டத்தையும் சேர்த்து 9 மாவட்டங்களுக்கு அதி தீவிர கன மழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை இந்த 10 மாவட்டங்களில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்கள் தவிர்த்து காசர்கோடு மாவட்டம் சேர்த்து இணைத்து 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் முன்னறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.
எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு 7 மாவட்டங்களுக்கு வரும் 4ஆம் தேதி வரை ரெட் அலர்ட் தொடர்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
