• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

Byமுகமதி

Jul 22, 2026

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மதிப்புக்குரிய ராகுல் காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை காந்தி பூங்காவில் நடைபெற்றது.
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடைபெற்று வரும் குளறுபடிகளைக் கண்டித்து போராடி வந்த மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதையும்,

அதற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி MP அவர்களை தாக்கி ரத்தக் காயப்படுத்தி துன்புறுத்தியும் அராஜகமான போக்கில் ஈடுபட்டு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி MP அவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை அராஜகமான முறையில் கைது செய்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும்
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியதோடு மட்டுமல்லாமல், ஜனநாயக ரீதியில் போராடும் எதிர்க்கட்சிகளின் குரலையும் அடக்க நினைக்கும் ஒன்றிய பா ஜ க அரசின் இந்த ஜனநாயக விரோத எதேச்சாதிகார அணுகுமுறை போக்கினை வன்மையாகக் கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் ஆலோசனையின் பேரில்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு முன்னாள் தலைவர் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமையில் புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற முன்னாள் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை. திவியநாதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச் செல்வன் மாவட்ட துணை தலைவர்கள் வேங்கை அருணாசலம் எம் ஏ எம் தீன் பழனிசாமி பாலாண்டார் வீ. தமிழ்ச்செல்வன் செயற்குழு உறுப்பினர் தனபதி மாநகர தலைவர்கள் மதன் கண்ணன் பாரூக் ஜெய்லானி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சூர்யா பழனியப்பன் தங்கசிவா வீரையா வீசா. இ. விஜி. அன்னவாசல் சுப்பிரமணியன் மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது கீரனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பவுல் ராஜ் கீரனூர் பாஸ்கர் மாவட்ட கலைப் பிரிவு தலைவர் மேப் வீரையா மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் குட்லக் முகமது மீரா செயலாளர் மயில்வாகனன் மாவட்ட ஓபிசி அணியின் தலைவர் ஆனந்தன் செயலாளர் எஸ் பி ஆறுமுகம் திருவப்பூர் மணி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் தினேஷ் குமார் அனீஸ் ரஹ்மான் மக்கள் கோபால் திருக் கட்டளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயபாலன் நமசிவாயம் நாச்சிமுத்து சேவா தளம் தலைவர் ஓம் ராஜ் திருவப்பூர் சுதாகர் விஸ்வநாதன் வாராப்பூர் ராமமூர்த்தி ஜெய்சங்கர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜகோபால் அன்னவாசல் ரபீக் முக்கனாமலைப்பட்டி முகமது கனி மச்சுவாடி சின்னக் கண்ணு அடப்பன்வயல் எஸ் ஏ காதர் காமராஜபுரம் ராமச்சந்திரன் பேராங்குளம் செல்வராஜ் காந்தி நகர் ராதாகிருஷ்ணன் கோவிந்தராஜன் தாமரைச் செல்வன் எம் ஏ கே சேட்டு நாகராஜன் ஜமீல் காதர் கோபி முத்து விஜயன் மகளிர் அணி தலைவர்கள் வடக்கு கவுரி தெற்கு சிவந்தி நடராஜன் சகாய ராஜ் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.