• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

எங்கிருந்து வந்தது கருப்புப் பணம் ?-கனிமொழி கேள்வி

ByA.Tamilselvan

Aug 2, 2022

பணமதிப்பிழப்பின் போது கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கூறிய நிலையில் .. எங்கிருந்து வந்தது கருப்புப்பணம் என பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி .கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சிலநாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவர் ஆசிரியர் நியமன முறைகேட்டில் சிக்கினார். அவருக்கு நெருக்கமான நடிகை ஒருவர் வீட்டில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது.இந்நிலையில் பணமதிப்பிழப்பின் போது கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கூறி இருந்தார்.தற்போது எங்கிருந்து கறுப்புப்பணம் வந்தது என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆளாத மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான கறுப்பு பணம் கைப்பற்றப்படுகிறது என்றுபாஜக எம்.பி. நிஷாத் தூபே கூறியதை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கேட்டுள்ளார்.