• Wed. Apr 24th, 2024

நான் அதிமுக எம்.பியா? ரவீந்திரநாத் எம்.பி.விளக்கம்

ByA.Tamilselvan

Aug 2, 2022

தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன் தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் பேட்டி.
ராஜபாளையத்தில், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடியாது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எளிய தொண்டன்தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும். தலைமை கழகம் யாருக்கு சொந்தம் என்று தற்போது தெளிவுபடுத்த முடியாத நிலை உள்ளது. கோர்ட்டு உத்தரவுப்படி தலைமைக்கழக அலுவலகத்தில் சாவி கொடுக்கப்பட்டது. இதுகுறித்து மேல் முறையீடு செய்தபோது 2 வாரங்களில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டன் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வண்ணம் கோர்ட்டு தீர்ப்பு அமையும். தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. என்னுடைய பங்களிப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு எடுப்பார். டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெறுமா? என்பது தொண்டர்களின் மனதை பொறுத்து அமையும். கட்சியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாண்டி தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *