• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மருத்துவமனையில் அனுமதிப்பட்ட இ.பி.எஸ்

ByA.Tamilselvan

Jul 29, 2022

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து கடந்த 27ஆம் தேதி சென்னையில் ஈபிஎஸ் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி நின்று கொண்டே 90 நிமிடங்கள் பேசினார்.
அப்போது திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மைக்கை அருகில் இருந்தவரிடம் கொடுத்து விட்டு சில நொடிகள் நின்று கொண்டிருந்தார். மயக்கம் அதிகரிக்கவே அங்கேயே அமர வைக்கப்பட்டார்.அவரது முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு காரில் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி பரிசோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.