• Wed. Jan 22nd, 2025

இரு கூட்டுக்கிளிகளான ஓபிஎஸ், இபிஸ் இணைய வாய்ப்பில்லை…

Byகாயத்ரி

Jul 29, 2022

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பிடம் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா இருதரப்பும் சமரசமாக செல்வதற்கு வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு வாய்ப்பே இல்லை என இரு தரப்பினரும் உறுதியாக பதில் அளித்தனர். அதனை தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழுவில் என்ன நடந்தது என்று ஓபிஎஸ் தரப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கட்சி அடிப்படை விதிகளை மீறி அத்தனை முடிவுகளையும் பொதுக்குழுவில் எடுத்தனர் என தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக பொது குழுவுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தை நாடுமாறும், வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் அதுவரை தற்போதைய நிலையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வாரத்தில் ஓபிஎஸ் கோரிக்கை மனுவை விசாரித்து முடிக்கவும் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.