• Sat. Jul 4th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் மனம் திரும்பி வந்தால் அதுகுறித்து இபிஎஸ் முடிவெடுப்பார்.

ByA.Tamilselvan

Jul 21, 2022

ஓபிஎஸ் மனம் திருந்தி வந்தால் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அதுகுறித்து முடிவெடுப்பார் எனமுன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி
புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய இலக்கை நோக்கி அதிமுக சென்று கொண்டுள்ளது.
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனின் கையெழுத்தை வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது. வங்கி உத்தரவு போன்றே தேர்தல் ஆணையமும் விரைவில் அங்கீகாரம் அளிக்கும். நிரந்தர பொதுச் செயலாளர் வேகத்தோடும் விவேகத்தோடும் மக்கள் தொண்டு ஆற்றுவதற்கு அதிமுக சென்று கொண்டுள்ளது.
உண்மையான அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தொண்டர்களால் நிரந்தர பொதுச் செயலாளராக விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார். .கள்ளக்குறிச்சி சம்பவம் வேதனைக்குரியது. உளவுத்துறை செத்துவிட்டது, காவல்துறை படுத்துவிட்டது, முதலமைச்சர் செயலிழந்துவிட்டார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஓபிஎஸ் மனம் திரும்பி வந்தால் இது குறித்து இடைக்கால பொதுச் செயலாளர் முடிவெடுப்பார்” என்று அவர் தெரிவித்தார்.