• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மீண்டும் அரசியலில் நுழையும் தமிழருவி மணியன்

ByA.Tamilselvan

Jul 21, 2022

காமராஜர் ஆட்சியை மலரச்செய்ய மீண்டும் அரசியலில் நுழைவதாக தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர்செய்ய மீண்டும் அரசியலில் நுழைவதாக தமிழருவி மணியன் அதிரடியாக அறிவித்துள்ளார். அத்துடன் காந்திய மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை காமராஜர் மக்கள் இயக்கம் எனவும் பெயர் மாற்றம் செய்து அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என பெரிதும் எதிர்பார்த்தார் தமிழருவி மணியன். கடைசியில் ரஜினிகாந்த் ஏமாற்றிவிட்டதால் வெறுத்து போன தமிழருவிமணியன் அரசியலே வேண்டாம் என ஒதுங்குவதாக அறிவித்தார்.தற்போது மீண்டும் அரசியலுக்கு வருதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.