தாய் தமிழ்நாட்டில் 100 நாட்களில் தவெகஅரசு 100 மதிப்பெண்களை டெண்டர் சர்ச்சையில் பெற்றுள்ளது இந்த டெண்டர் சர்ச்சை தற்போது தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது.
முதல்வரின் அறை மாறுகிறது அந்த முடிந்த வேலைக்கு டெண்டர் விடப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தை மாற்றும் முடிவு ஜூலை 27ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே 10வது மாடியில் புனரமைப்பு பணிகள் தொடங்கிவிட்டன; 90 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதிதான் அதற்கான 5.4 கோடி ரூபாய் டெண்டருக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

டெண்டர் விடாமல் எப்படி அலுவக பணிகளை மேற்கொண்டீர்கள் என்ற கேள்வி சட்டமன்றத்தில எழும் என்பதால், டெண்டருக்கு ஒரு அறிவிப்பை அவசர அவசரமாக வெளியிட்டு இருக்கிறது தவெக அரசு. ஏற்கனவே முதல்வர் விஜய்யின் பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இதே டெண்டர் சர்ச்சை எழுந்தது;
லிமிடெட் டெண்டரை விடக்கூடாது என அறிவித்து, அவசர பணிகளுக்காக கடந்த காலத்தில் வெளியிடப்பட்ட மின்வாரியத்தில் விடப்பட்ட லிமிடெட் டெண்டரை ரத்து செய்தது தவெக அரசு. ஆனால் முதல்வரின் எம்எல்ஏ அலுவலக புனரமைப்பு பணிகளுக்கு மட்டும் எப்படி லிமிடெட் டெண்டர் அறிவிப்பை அனுமதித்தது தவெக அரசு என்ற சர்ச்சை இருந்து கொண்டிருக்கிறது..
ஒரு புறத்திலே டெண்டர் விடாமல் வேலை நடக்கிறது; இன்னொரு புறத்திலே டெண்டர் விட்டும் அந்த வேலை நடைபெறவில்லை. என்ன முரண்பாடு?
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தொடங்கி இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் பொங்கல் விழாவை ஒட்டி வழங்கப்படும் இந்த திட்டத்தில் தற்பொழது குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.
கடந்த கால அம்மாவின் ஆட்சியில் ஜூன் மாதத்திற்கு முன்பாகவே கடந்த நான் வருவாய் துறை அமைச்சராக இருந்த காலத்தில், கைத்தறி துறையோடு இணைந்து இலவச வேட்டி ,சேலைகளுக்கான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு நூல் கொள்முதல் செய்யப்பட்டுவிடும்.

ஜூலையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளர்களுக்கு மூலப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு, நெசவு பணி வேகம் எடுத்துவிடும். தற்போது தவெக ஆட்சியில் ஆகஸ்ட் 15 கடந்த பிறகும் இதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
ஒரு கோடியே 77 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான வேட்டி,சேலையும் வழங்கப்படும் என்று தவெக அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியானது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி 20 ஒப்பந்ததாரர்கள் இறுதி செய்யப்பட்டு, கொள்முதல்கான விலை பட்டியலும் அறிவிக்கப்பட்டது..
இதிலே பஞ்சு மற்றும் பாலிஸ்டர் நூல் கொள்முதல்கான விலையை குறைவாக குறிப்பிட்டிருந்த ஒப்பந்ததாரர் உட்பட, அவருக்கு அடுத்த நிலையிலே குறைவாக கேட்டிருந்த 6 ஒப்பந்ததாரர்களும் விலையை குறைத்து குறிப்பிட்டிருந்த நிலையிலே, மொத்தம் 7 ஒப்பந்ததாரர்களும் மேலும் விலையை குறைக்க கேட்டு, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் தான் கைத்தறி துறை அமைச்சரிடம் இருந்து அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இந்த டெண்டர் குறித்து என்கிற செய்தி வெளியாகி வருகிறது. மிகக் குறைந்த விலையை குறிப்பிட்டு, முதலிடத்தில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் வழங்கக்கூடாது என்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் கசிந்து வருகிறது.
இது போன்ற தாமதத்தால் வரும் ஜனவரிக்கு முன்பாக ஒரு கோடியே 77 லட்சம் வேட்டி ,சேலைகள் உற்பத்தி செய்து வழங்க முடியுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
தாமதமாக மூல பொருட்களை வழங்கி, குறிப்பிட்ட நாட்களுக்குள் வேட்டி, சேலைகளை நெசவு செய்து வழங்க நெருக்கடி ஏற்படுகின்ற போது, இந்த வேட்டி சேலைகள் தரம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது.

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் முறைகேடுகள் நடைபெறவில்லை என்றால், குறைந்த விலையை குறிப்பிட்டிருக்கின்ற ஒப்பந்ததாரருக்கு ஏன் டெண்டர் கிடைக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என்ற கேள்விதான் எழுந்திருக்கிறது.
ஒரு புறத்திலே டெண்டர் விடாமல் வேலை முடிஞ்சிருச்சு. இன்னொரு இடத்துல தவெக அரசில் வேட்டி, சேலை திட்டத்தில் டெண்டர் விட்டாச்சு, ஆனால் வேலை தொடங்கவில்லை . தவெக அரசின் இந்த நிலையை எப்படி நாம் புரிந்து கொள்வது?
ஆட்சி மாற்றம் என்பது வெறும் நாற்காலியிலயோ, இடமாற்றத்திலயோ மட்டுமல்ல, அது மக்களின் வாழ்வியல் மாற்றத்திற்கான அடிப்படை. அந்த அடிப்படை புரிந்து கொண்டு செயல்படுவார் என்றுதான் அவருக்கு மக்கள் வாக்களித்தார்கள்.
மக்கள் நம்பிக்கை நிறைவேற்றுவாரா? நம்ம முதல்வர் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மக்களே, வீட்டில் உள்ள தோட்டத்தில் கீரை செடியும், குரோட்டன் செடியும் பயிரிடலாம். குரோட்டன் செடி வைப்பது பார்க்க அழகாகத்தான் இருக்கும். ஆனால் கீரை செடி பயன்படுகிற அளவிற்கு குரோட்டன் செடி நமக்கு பயன்படாது.
அதேபோல தான் கீரை செடியாக மக்களுக்கு அர்ப்பணித்து உழைத்து வருகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியாரை தள்ளி வைத்துவிட்டு, குரோட்டன் செடியாக இருக்கிற தவெக தலைவர் விஜய்யை தேர்ந்தெடுத்து, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது இப்போது வேண்டுமானால் பார்ப்பதற்கு அழகாக தெரிய வரலாம். ஆனால் உறுதியாக சொல்கிறேன், இந்த தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் நிச்சயமாக கிடைக்காது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





