• Sat. Jul 4th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சோனியா காந்தி வரும் 25ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

ByA.Tamilselvan

Jul 21, 2022

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் . மீண்டும் வரும் 25 ம் தேதி அவரை அஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 8-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆஜராகும்படி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சோனியா கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டதையடுத்து இன்று (ஜூலை21) விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். அதன்படி இன்று மதியம் சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் உடன் சென்றனர். அவரிடம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியதில் நடந்த பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு சோனியாகாந்தி பதில் அளித்தார். இன்றைய விசாரணை நிறைவடைந்ததையடுத்து சோனியா காந்தி புறப்பட்டுச் சென்றார். சோனியா காந்தியிடம் இன்று 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.