• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

உக்ரைன் மீதான போரில் 15 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலி

ByA.Tamilselvan

Jul 21, 2022

கடந்த 5 மாதங்களாக உக்ரைன்,ரஷ்யா போர் நடைபெற்றுவருகிறது. இந்தபோரில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் பலியாகி இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் 5-வது மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரஷிய தாக்குதலில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் மீதான போரில் 15 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலியானதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை ஏஜென்சி இயக்குனர் வில்லியம் பர்னஸ் கூறியதாவது:- அமெரிக்க உளவுத்துறையின் சமீபத்திய தரவுகளின் படி, உக்ரைன் போரில் 15 ஆயிரம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். மேலும் உக்ரைனுக்கு அதிக அளவில் துல்லியமான ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
எனவே அமெரிக்கா போன்ற நாடுகள் உக்ரைனை துண்டிவிட்டு போரை முடிவுக்கு கொண்டுவராமல் இருக்க சதி செய்கின்றன.