அரிசி உள்பட உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.
பேக்கிங் செய்யப்பட்ட அரிசி கோதுமை மாவு, பால் தயிர், மோர், லஸ்ஸி ஆகிய பொருட்களுக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளதால்அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக வருவதாகவும், அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த வரி மேலும் சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.