• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை முடக்க பார்க்கிறார்

ByA.Tamilselvan

Jul 15, 2022

பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் அதிமுகவை முடக்க பார்க்கிறார் என குற்றாம் சாட்டினார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் புறப்பட்டு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். . துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை முடக்க பார்க்கிறார். துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு நாம் கோவிலாக நினைக்கும் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க.வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார். அவரது கனவு, சூழ்ச்சி எடுபடாது. அவரை நம்பி யாரும் சென்று காலத்தை வீணாக்காதீர்கள். எனவே ஒற்றுமையாக இருந்து அ.தி.மு.க. ஆட்சி அமைய பாடுபடுவோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.