• Mon. Apr 29th, 2024

ப்ளு சட்டை மாறனுக்கு தரமான பதிலடி கொடுத்த ஆர்.ஜெ..!

Byவிஷா

Jun 22, 2022

ஆர்.ஜெ.பாலாஜியின் ‘வீட்ல விஷேசம்’ திரைப்படத்தை விமர்சனம் செய்த ப்ளுசட்டை மாறனுக்கு ஆர்.ஜெ.பாலாஜி, வீடியோ மூலம் தரமான பதிலடி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றிகரமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்ற  ஆர்.ஜெ .பாலாஜி. ஆர்.ஜெ, தொகுப்பாளர், நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர்.   
பல படங்களில் காமெடியினாக நடித்து பிரபலமான ஆர்.ஜெ.பாலாஜி ஒரு கட்டத்தில் பிஸியான நடிகராக மாறினார். ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வந்த ஆர்.ஜெ.பாலாஜி டுமுபு படத்தின் மூலம் ஹீரோவானார்.
ஹீரோவாக மட்டுமல்லாமல் அப்படத்தின் கதை திரைக்கதையையும் ஆர்.ஜெ.பாலாஜி எழுதினார். இதைத்தொடர்ந்து நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனரானார் ஆர்.ஜெ.பாலாஜி. இவ்விரு படங்களும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற தொடர்ந்து ஆர்.ஜெ.பாலாஜி ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆர்.ஜெ.பாலாஜி ஹீரோவாகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றிய வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியானது. ஹிந்தி படமான பதாய் ஓ படத்தின் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேஷம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வழக்கம் போல தன் ஸ்டைலில் வீட்ல விசேஷம் படத்தை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு ஆர்.ஜெ.பாலாஜி ஒரு வீடியோவின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் பல திரையரங்க உரிமையாளர்கள் வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பை பற்றி சிறப்பாக பேசியுள்ளனர். அதன் பிறகு பேசிய ஆர்.ஜெ.பாலாஜி, இந்த படம் யாருக்காக எடுத்தோமோ அவர்களுக்கு பிடித்தால் மட்டும் போதும், எந்த நீல சட்டைக்கும் இப்படம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *