மதுரையில் இபிஎஸ்க்கு ஆதரவாக ஒபிஎஸ்க்கு எதிராக ஆலந்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜீவா தலைமையில்
தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மேலும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒபிஎஸ்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதிமுகவில் தற்போது எழுந்துள்ள ஒற்றை தலைமை அனைத்து தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளதால் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தலைமை தாங்க அறிவித்தும், இதற்கு ஒபிஎஸ் வழி விட வேண்டும் எனவும், பொதுக்குழு நடத்தக்கூடாது என ஒபிஎஸ் போலிஸ்ஸில் புகார் தெரிவித்ததை கண்டித்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு ஆலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா, தலைமையில் 50 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து மாலை அணிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக தொண்டர் ஆலந்தூர் ஊராட்சி மன்ற முன்னாள்
தலைவர் ஜீவா
அதிமுகவில் தற்போது எழுந்துள்ள ஒற்றை தலைமை அனைத்து தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளதால் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தலைமை தாங்க அறிவிக்க வேண்டும், இதற்கு ஒபிஎஸ் வழி விட வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இபிஎஸ் எம்ஜிஆரால் அடையாளம்காட்டப்பட்டவர், ஒபிஎஸ் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர். ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்களும் இபிஎஸ்- தான் அதிமுகவிற்கு சரியான தலைமை என கருதுகிறார்கள். அதனால் இபிஎஸ் தலைமைக்கு வழிவிட வேண்டும் என்றார்.