• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்! ரஜினிகாந்த் ட்வீட்

என் அருமை நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தொடர்ந்து வீட்டிலிருந்தவாறே சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று திடீரென உடல்நலம் குறைவு ஏற்பட்டு ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் விஜயகாந்தின் மூன்று கால் விரல்களை அகற்றப்பட வேண்டுமென விஜயகாந்தின் குடும்பத்தாரிடம் தெரியப்படுத்தி விட்டு, மூன்று விரல்களை அகற்றி விட்டனர். இதைக் கேள்விப்பட்ட தொண்டர்களும், ரசிகர்களும், திரை உலகத்தினரும் வேதனையில் இருக்கின்றனர். இதிலும் பலர் எங்களது கேப்டன் விரைவில் குணமடைய வேண்டும் என்று உலகெங்கும் இருக்கும் முக்கிய கோயில்களில் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து சூப்பர் ரஜினிகாந்தும் மிகவும் வருத்தத்துடன் என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.