தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறு கூட்டலுக்கு ஜூன் 29-ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஜூலை 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.