• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

என்எல்சி விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ByA.Tamilselvan

May 6, 2022

என்எல்சி பணியார்கள்தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
என்எல்சி தேர்வில் 300 காலிபணியிடங்களுக்கு தமிழகத்திலிருந்து 1 வர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
கேட் மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்வது கடந்த காலங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும் முறையில் இருந்து மாறுபட்டுள்ளது.கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு என்பது உள்ளூர் விண்ணப்பதாரர்களை பாதிப்படையச் செய்வதோடு அவர்களுக்கான வாய்ப்பை பறிப்பதாக அமையும்.கேட் தேர்வு மதிப்பெண்களின் படி தேர்வு என்ற திடீர் அறிவிப்பு அத்தேர்வை எழுதாதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த காலங்களில் என்.எல்.சிக்கு நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே, என்.எல்.சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.