• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

ஒரு கோடிக்கு கார் வாங்கிய நடிகை!

தமிழில் சிரங்காரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைத்ரி. இந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் பிரபலமடைந்தார்.. பிறகு செக்க சிவந்த வானம், சைகோ போன்ற படங்களில் நடித்துள்ளார். இறுதியாக ஹே சினாமிகா படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு அதிதி நடித்த 3 படங்கள் நெட்ஃபிளிக்சில் ரிலீசானது.

அதிதி நேற்று தனது இன்ஸ்டாகிராமில் Audi Q7 XUV கார் வாங்கியதை போட்டோவுடன் பகிர்ந்திருந்தார். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. இந்த சொகுசு காரின் விலை வரியுடன் சேர்த்து ரூ.95.6 லட்சம் முதல் ரூ.1.05 கோடி. காரின் மாடலுக்கு ஏற்றது போல் விலையும் மாறுபடும். தற்போது அதிதி வாங்கி உள்ளது லேட்டஸ்ட் வெர்சன். Audi Q7 மாடல். இது இந்தியாவிற்கு மிக புதியது. இந்த கார் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!