• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை..,
சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!

Byவிஷா

Apr 18, 2022

தமிழகத்தில் இன்று சேலம், நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழையும் நிலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக,
18.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமுதல் மிக கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
19.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
20.04.2022: தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.04.2022: வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். .

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.