• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

இதே போல் இலவசம் கொடுத்தால் … இலங்கை நிலை தான் இந்தியாவிற்கும்…

Byகாயத்ரி

Apr 4, 2022

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் இலங்கை நிலைமை இந்தியாவுக்கும் வரும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து வருவதால் மாநிலங்களின் பொருளாதார நிலை சிக்கலில் இருப்பதாகவும் இதே நிலை தொடர்ந்தால் இலங்கை நிலைமை தான் இந்தியாவுக்கு வரும் என்றும் பிரதமரிடம் மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச திட்டங்களை நிறுத்த பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.