• Tue. Dec 10th, 2024

தரமற்ற பள்ளிக் கட்டிடங்களை இடிக்க திட்டம்…

Byகாயத்ரி

Apr 4, 2022

தமிழகம் முழுவதும் உள்ள தரமற்ற கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் என மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு திருநெல்வேலியில் பள்ளி கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தரமற்ற பள்ளிக் கட்டிடங்களை கண்டறித்து இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து கல்வித்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் சுமார் 8 ஆயிரம் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பழைய கட்டிடங்களை இடிப்பது குறித்த உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.