• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆண்கள் கட்டாயம் 2 திருமணம் செய்ய உத்தரவு..!

ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலை ஒட்டி உள்ளது எரித்திரியா நாடு சிறிய நாடான இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
மேலும் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகிறது.

இப்படி அடிக்கடி போர்களை சந்தித்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு போதிய ஆண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் வகையில் எரித்திரியா நாட்டில் புதிய விசித்திர சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும், அது குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கணவரின் முதல் மனைவி இந்த திருமணத்தை எதிர்க்கக் கூடாது அவ்வாறு எதிர்த்தால் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.