கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அன்போட அழைக்கப்பட்டவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் பிரபல நடிகரான ராஜ்குமார் – பார்வதம்மா இணையரின் இளைய மகன்.கன்னட திரையுலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய எளிய மனிதர். குழந்தை நட்சத்திரமாக கன்னட சினிமாவில் நுழைந்து, மாநில, தேசிய விருதுகளைப் பெற்றார். அப்பு என்ற திரைப்படம் வாயிலாக கதாநாயகனானார். இவர் பாடகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பல துறைகளில் தேர்ந்தவர். 45 இலவச பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்களை நடத்தினார். 1,200 மாணவர்களின் கல்வி செலவையும் ஏற்றிருந்தார் புனித் ராஜ்குமார்.இப்படி ஒரு நற்குணம் கொண்ட மனிதர் எதிற்பாரா விதமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது இப்பூவுலகை விட்டும் அவரின் ஆத்மார்த்தமான ரசிகர்களை விட்டும் மறைந்தார். இன்றும் பலரது நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கும் புனித் ராஜ்குமாரின் பிறந்த தினம் இன்று..!