• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தூங்கா நகரில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி !…

By

Aug 23, 2021

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 4 மணி அளவில் மதுரை நகர் பகுதிகளான பழங்காநத்தம் பெரியார் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.