சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பயனாளிகள் மருத்துவரிடம் நோய்க்கு சிகிச்சை பெற்று மருந்துகளையும் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் உரிய பராமரிப்பு இன்றி இயங்கி வருவதால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே கசிகின்ற அவலநிலை ஏற்படுகிறது.
இதனால் மருந்துகள் வீணாகி நோயாளிகளுக்கு உயிர் காக்க வேண்டிய பல்வேறு மருந்துகள் நோயாளிகளுக்கு கிடைக்காமல் வீணாகி வருவது அனைவரையும் வேதனை அடையச் செய்கிறது . எனவே அரசு கட்டிடங்கள் காலியாக உள்ள நிலையில் பராமரிப்பில்லாத பழைய கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வரும் இஎஸ்ஐ மருத்துவமனையை நல்ல நிலையில் உள்ள கட்டடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் கிடைப்பதுடன் அரசுக்கு நிதிச் சுமை குறைவதுடன் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்புடன் பணியாற்றும் சூழல் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.