• Sat. May 4th, 2024

பிபியில் இந்த வாரம் எவிக்‌ஷன் யார்?

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சிம்பு வந்த பிறகு புதிய உத்வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் எவிக்‌ஷன் செய்யாத சிம்பு, இந்த வாரம் யாரை எவிக்‌ஷன் செய்யப் போகிறார் என்கிற பேச்சுவார்த்தை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

சிம்பு வந்த பின் புது கெத்தோட வளம் வருகிறார் பாலாஜி முருகதாஸ் என்று சமூக வலைத்தளத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன..

வீட்டில நடைபெற்றுள்ள பல பஞ்சாயத்துகளை இந்த வாரம் சிம்பு எப்படி டீல் செய்ய போகிறார் என்பது ஒரு பக்கம் இருக்க இந்த வாரம் யார் எவிக்ட் ஆவார் என்கிற ஆர்வம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வாரம் நாமினேஷனில் தாமரை, சினேகன், தாடி பாலாஜி, ஜூலி, சுருதி, அனிதா, அபிராமி உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதிக வாக்குகளுடன் தாமரை செல்வி முதலிடத்தில் இந்த வாரம் சேவ் ஆக காத்திருக்கிறார். அவரை தொடர்ந்து ஜூலி, அனிதா மற்றும் சுருதி இருக்க கடைசி 3 இடங்களில் மிகவும் குறைவான ஓட்டுக்களுடன் அபிராமி, தாடி பாலாஜி மற்றும் சினேகன் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *