
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் வைகைப் புயல் வடிவேலு.
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், நாய்சேகர் படத்திற்காக நடிகர் வடிவேலு ஒரு டிராப் சாங் பாடியிருக்கும் அட்டகாசமான தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் போட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியே இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் வடிவேலுவுடன் இணைந்து நடித்து வருவதாக தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி உள்ளார்.
ராப் பாடல், ஹிப் ஹாப் பாடல் என ஏகப்பட்ட பாடல் பிரிவுகள் உள்ள நிலையில், டிராப் சாங் என்ற ஒரு பிரிவும் 1990 முதல் புழக்கத்தில் இருந்து வருகிறது. 2000ம் ஆண்டு தான் அந்த பாடல் மிகவும் பிரபலமானது. அப்படியொரு டிராப் பாடலைத் தான் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்காக வடிவேலு பாட உள்ளார்.
வைகைப்புயல் வடிவேலு எட்டணா இருந்தா, வாடி பொட்ட புள்ள வெளியே, சந்தன மல்லிகையில் என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தி உள்ளார். இந்நிலையில், நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் ரிட்டர்ன் ஆக உள்ளார் வடிவேலு என்பது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது