• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இந்த நாள்

Byகாயத்ரி

Mar 2, 2022

நடிகர் ரஞ்சன் பிறந்த தினம் இன்று..!

இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் ரஞ்சன் எனும் இராமநாராயண வெங்கடரமண சர்மா. நாட்டியக் கலைஞர், இசைக் கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர் இவர். ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றி வந்த வேப்பத்தூர் கிட்டு என்பவர் இவரது நடனத்தைக் கண்டு பி. ஜி. ராகவாச்சாரி என்ற திரைப்பட இயக்குனரிடம் அறிமுகப்படுத்தினார். அவரது ரிஷ்யசிருங்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு ரஞ்சனுக்குக் கிடைத்தது. ரஞ்சனின் முதல் வெற்றிப் படம் மங்கம்மா சபதம். ரஞ்சனின் திரைப்பட வரலாற்றில் 1948-ல் வெளிவந்த சந்திரலேகா ஒரு புதிய ஏற்றத்தைக் கொடுத்தது. கதாநாயகனைவிட வில்லனாக நடித்திருந்த ரஞ்சனே ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார். ரஞ்சனின் வாள்வீச்சு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து “ஷின் ஷினாகி பூப்லபூ”, “சிந்துபாத்” என்று பல இந்திப் படங்களிலும் நடித்தார். சிறுவயதில் இருந்தே நாட்டியத்தில் நாட்டம் கொண்டிருந்தார் ரஞ்சன். பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார். “நாட்டியம்” என்ற பத்திரிகையை ரஞ்சன் நடத்தினார். சிறுகதைகள், கட்டுரைகளையும் எழுதினார். திரைப்படத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னையிலிருந்து 1970களில் பின்னணிப் பாடகர் பி. பி. ஸ்ரீநிவாசுடன் இணைந்து மாமியோ மாமி எனும் இசை, நகைச்சுவை நாடகமொன்றையும் மேடையேற்றினார்.இப்படி பல கலைகளை கையாண்டு வந்த ரஞ்சன் பிறந்த தினம் இன்று..!