• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

கோவையில் வெளியிடப்பட்ட ஒரே மேடையில் 36 பேர் எழுதிய புத்தகங்கள்..,

BySeenu

Oct 25, 2026

கோவையில் நடைபெற்ற ‘பெரிதினும் பெரிது கேள் – 2026’ தொழில்முனைவோர் மாநாட்டில், முதல் முறையாகப் புத்தகம் எழுதிய 36 பேர் தாங்கள் எழுதிய புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்ட நிகழ்வு, லிங்கன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது. 27 வயது இளைஞர்கள் முதல் 56 வயதுடையவர்கள் வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் எழுதிய இந்தப் புத்தகங்களில், தங்களது அனுபவங்களும் பல்வேறு துறை சார்ந்த கருத்துகளும் இடம்பெற்றன.

ஞான சஞ்சீவனம் குருகுலம் மற்றும் மிஷன் மில்லியனர் கிளப் சார்பில், இரண்டாவது ஆண்டாக ‘பெரிதினும் பெரிது கேள் – 2026’ மாநாடு கோவை லீ மெரிடியன் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் சுமார் 1,200 தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, இதுவரை புத்தகம் எழுதாத 36 முதன் முறை எழுத்தாளர்கள் எழுதிய 36 புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்டனர். இதில் 27 வயது முதல் 56 வயது வரையிலான பல்வேறு வயதினரும், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களது சிந்தனைகளையும் அனுபவங்களையும் புத்தகங்களாகப் பதிவு செய்திருந்தனர்.

ஒரே நேரத்தில் 36 எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட்ட இந்த நிகழ்வு லிங்கன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

விழாவில் ஸ்கை குழும நிறுவனர் ஸ்கை சுந்தர்ராஜ், கோவை ரூட்ஸ் குழும மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் டாக்டர் கவிதாசன், தைரோகேர் நிறுவனர் டாக்டர் வேலுமணி, சாணக்கியா தொலைக்காட்சி நிறுவனர் ரங்கராஜ் பாண்டே, முன்னாள் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஏ. கலியமூர்த்தி, ஆரோக்கியா ஹெல்த் கேர் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. சிவராமன் உள்ளிட்ட தொழில்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் பங்கேற்றனர்.