மதுரை மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் / வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.சி.பழனி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.10.2026),
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,

மதுரை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட வைகை – யானைக்கல் தரைப்பாலம் பகுதியில், வடகிழக்கு பருவமழையினால் பெருக்கெடுத்து வரும் மழைநீர் எவ்விதத் தடையுமின்றி சீராகக் கடந்து செல்வதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பாலத்தின் கீழ்ப்பகுதியில் மரக்கட்டைகள், நெகிழி மற்றும் கழிவுகள் ஏதேனும் அடைப்பு ஏற்படுத்தாத வண்ணம் உடனுக்குடன் அகற்றிடவும், ஆற்றங்கரைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கைப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.





