• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

TNCD-யின் ‘கான்சாஸ் சிட்டி’ குடியிருப்புத் திட்டம் அறிமுகம்..,

BySeenu

Oct 25, 2026

TNCD-யின் ‘கான்சாஸ் சிட்டி’ குடியிருப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

கே ஜி குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான TNCD நிறுவனம், அதன் 31-வது திட்டமான ‘கான்சாஸ் சிட்டி’ குடியிருப்புத் திட்டத்தை கோவை திருச்சி சாலையில், சிங்காநல்லூர் அருகே அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 143 வீடுகளைக் கொண்ட இத்திட்டத்தில், 1 பிஹெச்கே, 2 பிஹெச்கே, 2 பிஹெச்கே பிரீமியம் மற்றும் 3 பிஹெச்கே வில்லமென்ட் வீடுகள் இடம்பெற்றுள்ளன. அறிமுகச் சலுகை விலை ரூ.39 லட்சத்தில் தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த போக்குவரத்து இணைப்பு, நவீன வாழ்க்கைமுறை வசதிகள் மற்றும் அமைதியான சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் சிங்காநல்லூரில் இருந்து சுமார் 10 நிமிட பயணத் தொலைவில் அமைந்துள்ள இத்திட்டத்தின் அருகே டிமார்ட், பிரிட்ஜ்வுட்ஸ் சர்வதேசப் பள்ளி, கேஎம்சிஹெச் சூலூர் மற்றும் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இது குறித்து TNCD நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார் கூறுகையில்,
வீடு வாங்க விரும்புவோர் சிறந்த இருப்பிடம், நவீன வசதிகள், அமைதியான வாழ்க்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த மூன்றையும் ஒரே இடத்தில், எளிதில் அணுகக்கூடிய விலையில் வழங்கும் வகையில் கான்சாஸ் சிட்டி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இத்திட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன என்றும் ஆற்றங்கரைத் தளம், கெஸிபோ ஓய்விடம், அழகிய பூங்காக்கள், கேம்ப் பயர் அமைந்த திறந்தவெளிப் பகுதி, ஊஞ்சல் வலை, உள்விளையாட்டு உடற்பயிற்சிக் கூடம், வீட்டிலிருந்தே பணிபுரிவோருக்கான இணை பணியிட வசதி, பல்நோக்கு அரங்கம் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பகுதி ஆகியவை இதில் அடங்கும். ஸ்மார்ட் ஹோம் தானியங்கி வசதிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

நொய்யல் ஆற்றை ஒட்டிய பசுமையான சூழலில் அமைந்துள்ள இத்திட்டத்தின் மையக் கருத்து, ‘ஆற்றங்கரையில் அமைதியான வாழ்க்கை’ என்பதாகும். குறிப்பாக, 3 பிஹெச்கே வில்லமென்ட் வீடுகள், அண்டை வீடுகளுடன் பொதுச்சுவர்கள் இல்லாத தனியுரிமையுடன், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பாதுகாப்பு மற்றும் பொதுவசதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.