• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புக்கொண்டு பேசினார், அப்போது பேசிய அவர், மு.க.ஸ்டாலினின் 69-ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோன்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மனதிற்குகந்த நண்பர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 69-ஆவது பிறந்த நாள் காண்கிறார். அவர் எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்பட்டு வருகிறார். அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள், அவர் நீடு வாழ்க என தெரிவித்துள்ளார்.

இதேபோல, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்தை சிறப்பாக வழி நடத்திச் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் பாசத்துக்குரிய மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் கமல் ஹாசன் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நிலையில் ரஜினியும் தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.