• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மதுரை ஆதி திராவிட நலத்துறையில் முறைகேடு..,
மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய கிராமத்தினர்..!

Byகுமார்

Feb 28, 2022

மதுரை மாவட்ட ஆதி திராவிட நலத்துறையில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமத்தினர் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிவேலிபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டடி மனையின்றி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டியும், மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நலம் அலகு-1 மதுரை, தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணை நடத்திநடவடிக்கை எடுக்க வேண்டும். தனிவட்டாட்சியர் கருப்பையா இடைதரகர்கள் மூலமாக விற்பனை செய்துவரும் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்யவேண்டும், வீட்டடிமனை பட்டாவை பணத்திற்கு விற்பனை செய்து வரும் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாச்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தை கள்ளிவேலப்பட்டி கிராமத்தினர் ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதி திராவிட நலத்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.