

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 25 வது ஆண்டு இசை பயணத்தை கொண்டாடும் விதத்தில் மதுரை ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடி உள்ளனர்.
புல்லாங்குழல் மீதமர்ந்து நாட்டியமாடும் விரல்களுக்கு சொந்தக்காரன்; விட்டேத்தி மனநிலையை ஆற்றுபடுத்துவோன்; வெறுமை வாழ்வின் சுடரொளி; இசைவழியே இளைப்பாற்றும் ஞானக்குழலோன்; கானங்களின் காதலன்; கரைந்துபோகும் கணங்களின் மீட்பன்; தீரா இசை ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் ஜீவநதி… ‘யுவனிசம்’ போற்றுவோரால் இவ்வாறெல்லாம் ஆராதிக்கப்படும் தமிழ்த் திரையிசை உலகின் தனிக்காட்டு ராஜாவான யுவனின் இசை சாம்ராஜ்யம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது!

இந்நிலையில் மதுரையில் history city u1fans என்ற பெயரில் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் 25ஆம் ஆண்டு இசை பயணத்தைபோஸ்டர் ஒட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் மேலும் பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். மேலும் பாட்டுகளின் தலைவா..உன் மெட்டுகளுக்கு விருதா..எங்கள் ஹார்ட்டுகளை தரவா. போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை மதுரை முழுவதும் யுவனின் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்



