மதுரை வைகையாற்றின் குறுக்கே 11.98 கோடி மதிப்பீட்டில் நீரை செறிவூட்டும் வகையில் புதிய தடுப்பணைக்கான பணியினை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதற்கு முன்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமினையும் தொடங்கி வைத்தார்! மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்..
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில், மதுரையில் கோடைக்காலங்களில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையினை நிரந்தரமாக சமாளிக்கும் பொருட்டும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கவும் பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொண்டு வருகின்றது! அதன் ஒரு பகுதியாக மதுரை ஆரப்பாளையம் அருகே வைகையாற்றின் குறுக்கே 320 மீ நீளத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் பொருட்டு நீர் வழித்துளைகள் மற்றும் தடுப்பணை அமைக்க சுமார் 11.98 கோடி மதிப்பீட்டில் 18 மாத காலத்தில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.’ என்றார்!
தொடர்ந்து தடுப்புப்பனை திட்ட மாதிரி வடிவம் குறித்து மாவட்ட ஆட்சியர் நிதி அமைச்சருக்கு விளக்கம் அளித்தார்.