• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Feb 7, 2022

அவல் கிச்சடி

தேவையானவை:
கெட்டி அவல் – அரை கப், தேங்காய்ப்பால் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, நிலக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – சுவைக்கேற்ப, மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு. வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய் – 4.

செய்முறை:
அவலை தேங்காய்ப் பாலில் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். நிலக்கடலையை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து.. பிறகு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.