• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கூலி வேலைக்குச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி..,

ByP.Thangapandi

Nov 27, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காளப்பன்பட்டியைச் சேர்ந்த கல்லம்மாள் (55) என்ற பெண்.,இவர் அதே ஊரைச் சேர்ந்த ஜெயம் என்பவர் தோட்டத்திற்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளர்.,

இந்நிலையில் தோட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் கத்தரி பயிரிடப்பட்டுள்ள சூழலில் காட்டு பன்றிகள் தொல்லைகளைத் தடுக்க சட்ட விரோதமாக போடப்பட்ட மின்சாரம் வயரை எதிர்பாராதவிதமாக மிதித்ததால் சம்பவ இடத்திலேயே பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,

சம்பவமறிந்து விரைந்து வந்த சேடபட்டி போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,

தோட்டத்திற்கு கூலி வேலைக்குச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது