• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அம்மா பாடலுக்கு கிடைத்த அங்கீகாரம்; அமலா நெகிழ்ச்சி!

தமிழில் 1980 காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்து வந்த அமலா திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதில்லை. அவரது வாரிசுகள் நடிக்க வந்துவிட்டார்கள். தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்து வந்தவர் 25 வருடங்களுக்குப் பின்.தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள ‘கணம்’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஷர்வானந்த், ரீத்து வர்மா, ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகார்த்திக் இயக்கி உள்ளார். அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமலா அக்கினேனி. ‘கணம்’ படத்தில் சர்வானந்திற்கு அம்மாவாக அமலா நடித்துள்ளார்.

தற்போது கிடைத்துள்ள இந்த வரவேற்பு தொடர்பாக அமலா கூறுகையில், மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ஜேக்ஸ் பிஜாயும், பாடகர் சித் ஸ்ரீராமும் உண்மையிலேயே ஒரு மாயாஜாலத்தைச் செய்துள்ளனர். கணம் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தது எனக்குக் கிடைத்த பெருமையாக உணர்கிறேன். நிஜ வாழ்விலும் நான் ஒரு தாய். அந்த நிலையை பொக்கிஷமாகக் கருதுகிறேன். படத்தை முடிக்கும் வரை எல்லோருக்கும் அம்மாவாகவே இருந்தேன். அது மிகவும் மதிப்புமிக்க விஷயம். அதை நான் என்றும் மறக்க மாட்டேன்” என்கிறார்.