• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ராகுல் காந்தி கண் முன்னே பாஜக ஆட்சி அமைக்கும் : அண்ணாமலை சவால்

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திதார்.

அப்போது, புரிதல் இல்லாத கட்சிகள், ஆளும்கட்சியினர் தொடர்ச்சியாக பொய்களை பரப்பி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். நீட் விலக்கு சட்ட மசோதா ஏன் திருப்பி அனுப்பப்பட்டது என்று மாநில அரசுக்கு தெரியப் படுத்தியுள்ளதாக ஆளுநர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ள காரணங்களை மாநில அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் கூறினார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்து வருவதாக கூறிய அண்ணாமலை, நாளை நடக்கும் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று தெரிவித்தார். மேலும், மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு செய்யக்கூடாது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பாஜக தனிபெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்றும் ராகுல் காந்தி கண் முன்னே அது நடக்கும் என்றும் கூறினார்.