• Wed. Jun 7th, 2023

வந்தா ராஜாவாதான் வருவேன்…வேட்புமனு தாக்கல் செயய் வந்த வேட்பாளர்

Byகாயத்ரி

Feb 4, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கலுக்கு வேட்பாளர்களாலும், அவர்களது ஆதரவாளர்களாலும் ஒன்று சேர்ந்து கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த பரபரப்புக்கு இடையே ராஜா வேடம் அணிந்த ஒருவர் தள்ளுவண்டியில் சேர் போட்டு அமர்ந்தபடி வந்தார். வண்டியை தள்ளிக் கொண்டே சிப்பாய் வேடம் அணிந்த 2 பேர் வந்தனர். ராஜா வேடம் அணிந்து வந்தவர் மாநகராட்சி 94-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.
அவரது பெயர் நூர்முகம்மது, கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர். சட்டமன்றம், பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என இதுவரை 37 முறை தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார். தற்போது 38-வது முறையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *