• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Feb 4, 2022

தேங்காய் சாதம்:
தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் – 1.5 கப், தேங்காய் துருவல் – 1 கப், எண்ணெய் – 2.5 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன், கடலை பருப்பு – 1 டீஸ்பூன், முந்திரி பருப்பு – 15-20, மிளகாய் வற்றல் – 2, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் சாதம் செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, முந்திரி, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். ஓரளவு பொன்னிறமாக மாறும் போது, சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான தேங்காய் சாதம் ரெடி.