• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா உறுதி!..

இந்தியா முழுவதும் மூன்றாம் அலை வேகமெடுத்து வருகிறது. அதேபோல நாட்டிலேயே கொரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களில் தமிழகம் ஒன்று

தினசரி 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டுமே 23 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தான் கொரோனா உச்சம் பெற்றுள்ளது. அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

இந்நிலையில், தற்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தற்போது கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.